ஸ்டாலின், உதயநிதியை பின்பற்றுங்கள்…! நடிகை கஸ்தூரி கூறிய காரணம் என்ன?
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தந்தையுமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்குள் திடீரென நுழைந்த உதயநிதி ஸ்டாலின், சமையலறைக்கு சென்று ஆய்வு செய்தார். உணவு சுகாதாரமாகவும், நன்றாக உள்ளதா என்பதை சாப்பிட்டுக் கொண்டே அவர் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்துக்கு சென்று உதயநிதி ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், உணவு சாப்பிட்டதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், சட்டமன்ற உறுப்பினர் உதநிதி ஸ்டாலினையும், அவரது தந்தையுமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “கற்பனையில் கூட நம்பியிருக்க மாட்டேன், நடக்கிது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தந்தையும் மகனும் எடுத்துக்காட்டாய் செயல்படுகிறார்கள். வாழ்த்த சந்தோஷமாக இருக்கிறது. Planned publicity என்றாலும் கூட நல்ல விஷயம். என்னைப் போன்ற முரணாளர்களை திரும்பி பார்க்க வைத்தால் அது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயமே. அரசியல் முதிர்ச்சி தலைவர்களுக்கு மட்டுமே போல இங்கு வந்து வாந்தியெடுக்கும் ஒன்றிய உயிரினங்கள், திமுக தலைவர்களைப் பின்பற்றினால் தேவலாம்” இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
