சசிகலா என்ன வேஷம் போட்டாலும் எதுவும் நடக்காது… சி.வி.சண்முகம் ஆவேசம்…
சசிகலாவுக்கும், அதிமுகவின் சரித்திரத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றும் சசிகலா என்ன வேஷம் போட்டாலும் எதுவும் நடக்காது என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமமுக தலைவர் டிடிவி தினகரன் குறித்து காட்டமாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: என்னை நிதானமாக பேசினாரா என்று டிடிவி கேட்கிறார். ஆமா இவர்தான் எனக்கு ஊத்திக்குடுத்தாரு. ஏன்னா… அது டிடிவி தினகரனோட குலத்தொழில்… ஊத்திக் கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க அவனுங்க. கூவத்தூர்ல அதுபோலதான் ஊத்திக் கொடுத்தான். இல்லைன்னு சொல்ல சொல்லு… என டிடிவி தினகரனை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக தாக்கிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்து சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்தார். சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே அவருக்கு உதவியாளராக வந்தார், அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.
