சினிமா

சர்ச்சைக்குரிய இணைய தொடரானது தி பேமிலி மேன் 2 …! அமேசான் நிறுவனத்திற்கு அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்த மூத்த இயக்குநர் !

The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணைய தொடரை நிறுத்த தமிழர்களும், தமிழ் நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய மத்திய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

Actor-politician Seeman demands legal action against The Family Man 2, asks  TN govt to ban the show | Hindustan Times

தமிழ் ஈழப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தையும் ,அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற, நபர்களால் தமிழின விரோதிகள் இத்தொடர் எடுக்கப்பட்டிருப்பது என்பதை தொடரும் காட்சிகள் உணர்த்துகின்றன.

The Family Man Season 2 Review: Samantha shines as the fierce Raji

அறமும், வீரமும் ,தன்னலமற்ற ஈகமும், செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் ,தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்துடன் தொடரை உருவாகியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் .

இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லிம், வங்காளி என குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிரான மனநிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

Veteran director Bharathiraja breaks silence on Meera Mithun issue -  DTNext.in

இத்தொடரை தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பு நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும், புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பங்கேற்பதை தவிர்க்க இயலாது என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.