3 வயது குழந்தை முதல் கொரோனா தடுப்பூசி… அரசு அனுமதி…!
சீனாவில் 3 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு, முதியோருக்கும், அதன் பிறகு இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவேக் என்ற தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயதுக்குடையவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவேக் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீனாவேக் தலைவர் யின் வெய்ங்டோங்க், இந்த தடுப்பூசியை 3 முதல் 17 வயதுக்குடையவர்களுக்கு செலுத்த சீர அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், அவசர தேவைக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்றார். இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவடைந்துவிட்டதாகவும், கொரோனாவேக் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்தார்.
