சினிமா

சீன மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம் 2 …! இயக்குனர் யார் தெரியுமா ?

கேரள திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் 2013-ல் திரைக்கு வந்த படம் திரிஷ்யம் . இந்த படம் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

Papanasam Movie Review {4/5}: Critic Review of Papanasam by Times of India

இந்த படம் தமிழிலும் உலகநாயகன் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

Drishyam 2 review: Mohanlal film is a solid, satisfying sequel |  Entertainment News,The Indian Express

இந்நிலையில் சீன மொழியிலும் திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்து 2019-ல் வெளியிட்டனர். அங்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படமும் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இதுபோல் திரிஷ்யம் 2-ம் பாகத்தை சீன மொழியிலும் ரீமேக் செய்ய உள்ளனர்.

திரிஷ்யம் முதல் பாகத்தில் சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரண் அடைவதுபோல் மாற்றி இருந்தனர். தற்போது 2-ம் பாகத்திலும் திரைக்கதையில் லேசான மாற்றம் செய்ய உள்ளனர். திரிஷ்யம் 2 சீன ரீமேக்கை சாம்குவாவே இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .