தமிழ்நாடு

பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு… முன்னாள் ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை…

முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியை, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சியை அடுத்த அரியமங்கலம் மலையப்பநகரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் அவர் ஈடுபட்ட வருகிறார். இந்த நிலையில் தண்டபாணிக்கும், அவரது விட்டின் அருகே வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான பால முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தண்டபாணிக்கும், பாலமுருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அப்பகதி மக்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் பிரச்சனை முடிந்தபாடில்லை. நேற்று அதிகாலை வீட்டில்இருந்த தண்டபாணி வெளியே வருதை கண்ட பாலமுருகன், திடீரென மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பாஜக நிர்வாகியான தண்டபாணியை, பாலமுருகன், அரிவாளால் வெட்டினார். இதில் தண்டபாணியின் கை மணிக்கட்டு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், காயமடைந்த தண்டபாணியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி ஒருவர், அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.