தமிழ்நாடு

தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வராதீங்க… ககன்தீப் சிங்பேடி கண்டிப்பு…

கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர், சங்கர் ஜிவால் மற்றம் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். மார்க்கெட் வளாகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ககன்தீப் சிங்பேடி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போ இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இது போன்று தொடர்ச்சியாக தடுப்பூசி போட்டு வந்தால் 20 நாட்களுக்குள் மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட முடியும் என்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கழிவறைளில் தண்ணீர் வசதி உள்ளதாகவும், ஆனாலும் கழிவறை வசதிகளை மேலும் சீரமைக்க வேண்டும் என்றார். மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, மற்ற பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரக்கூடியவர்களும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வரக்கூடியவர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்தார்.