தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் புயலால் கடந்த சில நாட்களாக குஜராத், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே ‘டவ்தே’ புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சுமார் 190 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் பல வீடுகள் குஜராத் மாநிலத்தில் சேதமடைந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வரும் 23 ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
