தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுரை, சேலம், தருமபுரி, கடலுார், திருச்சி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு பதிலாக அனீஷ் சேகர் நியமனம்
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசு நியமனம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினி நியமனம்
