தமிழ்நாடு

பிப்ரவரி 2021 இல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு பதில் மறுதேர்வு நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம்.

‘ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் தேர்வு நடத்த திட்டமித்துள்ளோம். தேர்வுக்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் தேர்வு எழுதலாம்.

அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதற்கு நடைபெற்ற தேர்வில் சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
என அவர் கூறினார்.