Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 26,465 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,465பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 197பேர் உயிரிழந்து உள்ளனர். 22,381பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் நேற்று மட்டும் 1,52,812மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 24,465பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,20பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 26,445பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,36,98,799மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 15,525பேர் ஆண்கள், 10,940பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,97,824ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,26,103ஆகவும் அதிகரித்து உள்ளது.

22,381பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,73,439 ஆக உயர்ந்தது.

197பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,73பேர் தனியார் மருத்துவமனையிலும், 124பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,171ஆக அதிகரித்து உள்ளது.