உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அவருக்குச் சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையின் போது ரூ.81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டுப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.41.9 கோடி நிரந்த வைப்புத்தொகை, ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
