அரசியல்தமிழ்நாடு

நாங்கள் ‘கத்தரிக்கோல்’ சின்னத்தில் நின்றால்..எடப்பாடி ‘பிளேடு’ சின்னத்தில் நிற்க தயாரா..?”எடப்பாடிக்கு சவால் விட்ட வைத்திலிங்கம்..

திமுக அரசைக் கண்டித்து ஒரத்தநாட்டில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தியது அமமுக. டிடிவி தினகரன் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் கலந்துகொண்டார்

இந்தக் கூட்டத்தில் தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பேசிய வைத்திலிங்கம், ” சுயநலக்காரரான எடப்பாடி பழனிசாமியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்வதை அவர் கேட்டு இருந்ததால் இன்னமும் அதிமுகவே தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கும்.

இப்போதிருக்கும் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் அறிக்கையில் 524 வாக்குறுதிகளைத் தந்த திமுக, அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவர அதிமுகவும் அமமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படும். தமிழகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக, ஓபிஎஸ் தினகரன் இருவரும் அடித்தளமிட்டுள்ளனர். நிச்சயம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் அமமுகவும் அமோக வெற்றிபெறும்

அதிமுக ஒன்றாக இணைய யார் தடையாக இருந்தாலும் அவர்கள் துாக்கிவீசப்படுவார்கள். தொண்டர்களால் அவமானப்படுத்தப்படுவார்கள். கையில் அதிகாரம், பணம் இருக்கிறது என நினைக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியால் ஒரு தொகுதியில் கூட ஆயிரம் வாக்குகள் வாங்க முடியாது. நாங்கள் கத்திரிக்கோல் சின்னத்தில் தேர்தலில் நிற்கத் தயார். எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்கத் தயாரா? அப்படி நின்று எங்களைவிட ஒரு வாக்கு அதிகமாக வாங்கிவிட்டால், அதிமுகவை விட்டு விலகி விடுகிறோம்” என்றார்.