தமிழ்நாடு

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி..

சட்ட‌மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14/04/2023) வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கனிமொழி எம்பி

இந்நிகழ்வில் , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.