தமிழ்நாடு

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம்,கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் விற்பனை செய்யும் தயிர் உறைகளில், “தஹி” என்ற இந்திச் சொல்லைத்தான் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும். தயிர் உறைகளில் தயிரின் ஆங்கில பெயரை நீக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

ஆவின் தயிர் உறைகளில் ‘தயிர்’ என்ற சொல்லும், ‘உரசன’ என்ற ஆங்கிலச் சொல்லும் இடம் பெற்று உள்ளன. இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு, “தஹி” என்ற இந்தி சொல்லைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்றும் தயிர், மொசாரு, பெருகு உள்ளிட்ட மாநில சொல்லாடல்களை பயன்படுத்தலாம் எனவும் மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

Image