திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மண்டபத்தை புனரமைக்க வேண்டுமென அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்..!
திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மண்டபத்தை புனரமைக்க வேண்டும் என்று அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
திருவண்ணாமலையில் அம்மணி அம்மனின் வம்சாவளியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அருகே அண்மையில் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மண்டபத்தை பார்வையிட்டனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகமுடையார் அரன் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கூறியதாவது :
ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது தொன்மையான அம்மணி அம்மன் மண்டபத்தையும் சேர்த்து எடுத்தது வருத்தத்தை அளிக்கிறது என்றும் இடிக்கப்பட்ட மண்டபத்தை புனரமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் அகமுடையார் மகாசபையின் தலைவர் பொன் ரஜினிகாந்த் மற்றும் அகமுடையார் சங்கத் தலைவர் செல்லதுரை ஆகியோர் அந்த இடத்தில் அன்னசத்திரம் அம்மணி அம்மாள் பெயரில் அரசு உடனடியாக கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்தனர்.


