தமிழ்நாடு

சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான 46-ஆவது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் 22-ஆம் தேதி வரை மொத்தம் 17 நாள்கள் நடைபெறும்.

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக 200 சேர்த்து மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்த 46-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, தேவி பாரதி, சந்திரா தங்கராஜ், தேவதேவன், சி.மோகன், பிரளயன் ஆகியோருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்கினர்.

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளுடன் தலா 1 லட்சம் ரூபாயும் 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளையும் வழங்கினார். தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.