விளையாட்டு

IND VS SL : இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு புனேயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவாதாக டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஜனவரி 03, 05, 07 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டி கடந்த 03ம் தேதி மும்பையில் உள்ள புகழ் பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களம் காண உள்ளது .

இதேபோல் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களம் காண இருக்கிறது . இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் விளையாடி வருகின்றனர் .

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .