இந்தியாஉலகம்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தாய் ஹீராபென்னை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

US President Joe Biden condoles death of PM Modi's mother

இந்த நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து குஜராத்திற்கு விரைந்த பிரதமர் மோடி காந்திநகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி தனது தோளில் சுமந்து சென்று காந்தி நகர் மயானத்தில் தாயாரின் சிதைக்கு தீமூட்டி இறுதிசடங்கு செய்தார்.

Heeraben's mortal remains consigned to flames; condolences poured in from  all corners | HIGHLIGHTS | India News – India TV

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.