அரசியல்தமிழ்நாடு

கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியுமா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.2500, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அனைத்து கார்டுகளுக்கும் வழங்கினோம். ஆனால் இப்போது கொடுப்பது ரூ.1000. கரும்பு கிடையாது. அதுவும் கார்டிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. தரமான பொருள் கொடுத்தால் மக்கள் ஏன் குறை செல்லகிறார்கள்.

அரசுக்கு நிர்வாக அனுபவம் இல்லை என்பதற்கு முழுமையான ஒப்புதல் வாக்கு மூலமாகத்தான் அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்து உள்ளது. விவசாயிகள் அரசை நம்பி கரும்பு பயிரிட்டுள்ளனர். கரும்பு இல்லாமல் பொங்கல் உண்டா. இதனால் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து ரேசன் கடைமூலம் பெங்கலுக்கு வழங்க வேண்டும் என ஜெயக்குமார் கூறினார்.