இந்தியாகுற்றம்

பெற்ற தந்தையை 30 துண்டுகளாக கூறு போட்ட கொடூர மகன்..!

இருபது வயது இளைஞர் தனது தந்தையை கொன்று உடலை 30 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம்(53) . அவரது மகன் வித்தலா(20 வயது). தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

கடந்த 6ம் தேதி அன்று நடந்த தகராறில் மகன் வித்தலா தந்தையை இரும்பு கம்பியால் ஆவேசமாக அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்திருக்கிறார்.

அதன் பின்னர் தந்தையின் உடலை 30 துண்டுகளாக வெட்டி பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் நகர் புறநகர் பகுதிக்கு சென்று அங்கே அவர்களுக்கு சொந்தமான பண்ணையில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் வீசி விட்டு வந்திருக்கிறார்.

போலீசார் நடத்தி வந்த விசாரணையில் இந்த உண்மைகள் தெரிய வந்ததை அடுத்து வித்தலா கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பரசுராம் மது அருந்தி விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்து வந்ததால், கொடுமை தாங்க முடியாமல் இரும்பு கம்பியை அடித்து கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.