பிள்ளைகளுக்கு ஆயுதங்களின் பெயர் வைக்கவும்: வடகொரிய அறிவுறுத்தல்.
ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியும், அணு ஆயுத சோதனை நடத்தியும், அண்டை நாடுகளையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், துப்பாக்கி, வெடிகுண்டு, செயற்கைக்கோள் போன்ற தேசபக்தி பெயர்களை வைக்காமல், மென்மையான பெயர்களை வைத்தால்; பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியா – வட கொரியா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு, வட கொரியாவில், முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் நினைவு தினத்தை முன்னிட்டு, 11 நாள்கள் நாட்டில் யாரும் சிரிக்க, கடைக்குச் சென்று பொருள்கள் வாங்க, குடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
