நகர்ப்புற உள்ளாட்சி சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி:அரசு உத்தரவு.
சட்டப் பேரவையில் விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்குப் பின் மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக 2 ஆயிரத்து 200 கோடி ருபாய் வழங்கப்பட்டு 4 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் படி, வரும் 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக 2 ஆயிரத்து 200 கோடி ருபாய் வழங்கி, முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் சாலைகளின் மேற்தளத்தினை முறையாக வெட்டி எடுத்து ((milling)) புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
