அரசியல்தமிழ்நாடு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற Sports For Devlopment நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி எம் பி..!

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சைல்டு லைன் – 1098 & இரயில்வே குழந்தைகள் மையம் தூத்துக்குடி ஒருங்கிணைப்பில் இன்று (15/11/2022) செவ்வாய்க்கிழமை, நடைபெற்ற Sports For Devlopment நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, ஆயுதப்படை காவலர்கள் மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கபாடி போட்டியை துவக்கி வைத்தார் கனிமொழி கருணாநிதி.

இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு.கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன், திட்ட இயக்குநர் திரு.மன்னர் மன்னன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!