சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் இணைந்த கேரள சினிமாவின் முக்கிய நடிகர்..!

தமிழ் சினிமாவில் பெரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என்ற அற்புத படைப்புகளை கொடுத்து திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் புரட்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை உருவாகி வருகிறது .

இந்தப் படத்திற்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் வடிவேலு மற்றும் பஹத் பாசில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Mari Selvaraj unites Fahadh, Vadivelu, Keerthy and Udhayanidhi for Maamannan-  Cinema express

இந்நிலையில் நடிகர் ஃபஹத் பாசில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.

maamannan shoot

கேரள சினிமாவில் கலக்கி வரும் பஹத் பாசில் தற்போது தமிழில் அதிக படங்களில் இணைய ஆரம்பித்துள்ளார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இக முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வருத்திற்குரிய மேட்டர் என்னவென்றால் மாமன்னன் படம் தான் உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தி முடித்ததும் அவர் அரசியலில் கவனம் செலுத்த உள்ளாராம்.