கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அனல் பறக்கும் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் குஜராத் அணியும் , இரண்டாவது போட்டியில் பாப் டுபிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து கொல்கத்தா அணி கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் வகையில் களத்தில் உள்ளது.
குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தப்பக்கம் கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த அனல் பறக்கும் இரண்டு போட்டிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
