பஞ்சாப் VS டெல்லி அணிகள் இன்று மோதல்..!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
இதுவரை 5 போட்டியில் விளையாடிய டெல்லி அணி 2 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது . இந்த பக்கம் 6 போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணி 3 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது .
பஞ்சாப் அணி தனது முந்தைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது . டெல்லி அணி இதற்கு முன் ஆடிய ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது .
இதனால் தோல்வியிலிருந்து மீண்டு வர டெல்லி அணியும் ,பஞ்சாப் அணியும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கட்டாயம் வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரவுக்கு பஞ்சமிருக்காது.
இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
