டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..! பஞ்சாப் அணிக்கு எதிராக ரோஹித்தின் வியூகம் என்னவாக இருக்கும்…?
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடக்கி அனைத்து போட்டிகளும் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.
இதில் 5 முறை கோப்பை வென்ற மும்பை அணி இந்த சீசனில் முதல் 4 போட்டிகளில் படு மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது அவர்களின் இந்த தோல்வி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தன.
இதையடுத்து இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் முதல் வெற்றியை கட்டாயம் பெற வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.
இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.
5-வது லீக் போட்டியில் இன்று விளையாடும் மும்பை அணி முதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த பக்கம் விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்தில் உள்ளது.
