விளையாட்டு

அதிரடி காட்டிய உத்தப்பா , ஷிவம் துபே..! பெங்களூரூ அணிக்கு 217 ரன்கள் இலக்கு…

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை அணியுடன் ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் பெங்களூரூ அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது .

இதில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர் .

வழக்கம் போல் தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் . இதையடுத்து வந்த உத்தப்பா ,ஷிவம் துபே இருவரும் நிலைத்து நின்று ஒரு அழகான ஆழமான பாட்னர்ஷிப் அமைத்தனர் . ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் ஷிவம் துபே என பெங்களூரு அணியின் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக பறக்க விட்டனர் .

வந்த நொடி முதல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இவர்களின் அரைசத்திற்கு பிறகு உத்தப்பா ,ஷிவம் துபே இருவரும் ,பெங்களூரு அணியின் பந்துவீச்சை வெறித்தனமாக எதிர்கொண்டனர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து அசாத்தியது .உத்தப்பா 50 பந்துகளில் ( 4 பவுண்டரி , 9 சிக்ஸர் ) என 88 ரன்களும் ,ஷிவம் துபே 46 பந்துகளில் ( 5 பவுண்டரி ,8 சிக்ஸர் ) என 95 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.