லக்னோவின் வெற்றிப்பயணத்தை தகர்க்குமா டெல்லி அணி..?
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய அணியாக களமிறங்கியுள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
இந்த பக்கம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலா ஒரு வெற்றி தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் DY Patil மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
