அரசியல்தமிழ்நாடு

ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதை விடுத்து இனி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதை விடுத்து இனி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது :

மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது ஸ்டாலின் உரிய திட்டங்களை தீட்டியிருந்தால் இன்று இதுபோன்ற சூழல் ஏற்பட்டிருக்காது

தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கும்

திமுக, அதிமுக ஆகியவை குற்றம்சாட்டுவதை விடுத்து இனி ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்

தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்