தமிழ்நாடு

கனமழையை எதிர்கொள்ள தயார்..! சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது :

இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

வெள்ளம் வடியாத இடங்களில் விரைவில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

அதிகமான இடங்களில் படகுகளை தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறோம்.பொதுமக்கள் ஏறும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்களை கூடுதலாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.