அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் பேரூர் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறப்புரையாற்றிய கனிமொழி எம்பி ..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதூர் பகுதியில் நடைபெற்ற பேரூர் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு, வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சிறப்புரையாற்றினார் கனிமொழி எம்பி

இந்த நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் R.ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் .செல்வராஜ், மும்மூர்த்தி பேரூர் செயலாளர் மருதுபாண்டியன் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்