அமுதகவி உமறுப்புலவர் 379-வது பிறந்தநாள் : எட்டயபுரம் பகுதியில் உள்ள அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார் கனிமொழி எம்பி
அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் 379-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

