லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்…
கோவை தொண்டாமுத்தூரில், லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது கோவையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்களக்கும் மதிய உணவுகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். மேலும், வீடுகள்தோறும், நோயெதிர்ப்பு சத்து மாத்திரைகள், முகக்கவசங்கள், கபசுரகுடிநீர் பொடி ஆகியவற்றையும் வழங்கினார்.
தொடர்ந்து தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
