அரசியல்தமிழ்நாடு

அப்பாவைப் போல எனது சம்பளத்தை கல்விக்காக பயன்படுத்துவேன்

எனது தந்தையை போன்றே நானும் எனது சம்பளத்தை கல்விக்காக பயன்படுத்துவேன் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால், காலியான அவரது கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெற்றது.

அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த போட்டியிட்டார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை போலவே தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில், வெற்றி பெற்ற விஜய் வசந்த், காங்கிரஸ் தலைமை அலுவலகமாக சென்னை சத்யமூர்த்தி பவன் வந்தார். அவரை காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், கொரோனாவை தூரத்துவதற்கான பணியை உடனடியாக அரசுடன் சேர்ந்து மேற்கொள்வேன் என்றும் தெரிவித்த விஜய் வசந்த், எனது தந்தை அவரது சம்பளத்தை மாணவர்களின் கல்விக்காக கொடுத்தார் அதே போன்று நானும் எனது சம்பளத்தை கல்விக்காக பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.