அசாமில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவு
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று இரவு சரியாக 7.22 மணி அளவில் ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இரவு 7.22 மணியளவில் அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 27 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அடுத்தடுத்த 3 நாள்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
