ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 9-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
இன்று பிற்பகல் இந்திய நேரப்படி சரியாக 3:30 மணிக்கு DY Patil மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரக்கல் களத்தில் உள்ளனர்.
