அடுத்தடுத்து வெளியாக போகும் தனுஷ் படங்கள்!
நடிகர் தனுஷ் கைவசம் பல படங்கள் உள்ள நிலையில் அவற்றை ஒவ்வொன்றாக இறக்கி வருகிறார். இந்த வருட துவக்கத்திலேயே வெளியான மாறன் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அதை பற்றி கவலை படாமல் தமது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் என தனுஷுக்கு இந்த வருடமே பல படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படி தமது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மாதம் பாதியில் முடிவடையும் நிலையில், அடுத்து வாத்தி படத்தின் மீதமுள்ள பாதியை முடித்து கொடுத்து விட்டு, திருச்சிற்றம்பலம் டப்பிங் இல் இணைய உள்ளார்.
இதை எல்லாம் முடித்த பின்பு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இன்னும் சில இயக்குனர்களிடம் தனுஷ் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
