விளையாட்டு

ஐபிஎல் 2022 : RCB VS KKR 128 ரன்களில் கொல்கத்தா ஆல்-அவுட்

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அணியின் தூண் என்று கருதிய தொடக்க வீரர்கள் ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் . அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 13 ரன்களில் ஹசராங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார் .

பின்னர் வந்த நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேறினார். கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது .

பெங்களூரு அணிக்காக தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜாக்சனை அவரது முதல் பந்திலே வந்த வழியில் அனுப்பி வைத்தார் .

கொல்கத்தா அணிக்கு விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் நின்று விளாசினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பின்னர் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் வீழ்ந்தார் .

இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது .

இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.