வணிகம்

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று (மார்ச் 29) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00 ஆக உள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் 7 முறை அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது.

சென்னையில், இன்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94, டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்து ரூ.96.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.