தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காணும் வகையில் வடிகால்கள் அமைக்கும் பணிகளை பிரையன்ட் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று (07/03/2021) திங்கள்கிழமை, நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

இந்நிகழ்வின் போது அம்பேத்கர் நகர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி உடனிருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் .கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

