உலகம்

விமான போக்குவரத்தை நிறுத்தும் திட்டம் இல்லை – உக்ரைன் அரசு

விமான போக்குவரத்தை நிறுத்தும் திட்டம் தற்போது தங்களிடம் இல்லை என உக்ரைன் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் காரணமாக கேஎல்எம் டச்சு ஏர்லைன்ஸ் உக்ரைன் மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களை காட்டி, இன்னும் பல நாடுகள் விமான சேவையை ரத்து செய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், விமான போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.