இந்தியாவில் அதிவேகத்தில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கடந்த சில நாட்களாவே அதிவேகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,26,65,534 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பு குறைந்து வரும் அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 91, 930 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,16,77,641 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 346 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,09,11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8,92,828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்து வருகிறது.
