விஜய் மக்கள் இயக்கத்திற்கு மறுக்கப்பட்ட ஆட்டோ சின்னம்..! வெளியான ஷாக்கிங் நியூஸ்…
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பிற்கும் குணத்திற்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர் .
அந்த வகையில் நடிகர் விஜய் தன் ரசிகர்களால் அவர் பெயரில் மக்கள் இயக்கத்தினை நடத்தி வருகிறார் பல லட்ச ரசிகர்கள் இணைந்து இருக்கும் இந்த இயக்கத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இதற்காக விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்து ஆட்டோ சின்னம் மறுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் சுயேச்சை கட்சிகளுக்கு சுழற்சிமுறையில் தான் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
