சினிமா

மிரட்டலான போலீஸ் கெட்டப்பில் நடிகை திரிஷா..! வைரலாக வலம் வரும் புகைப்படம்..

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.

எத்தனை கதாநாயகிகள் வந்தாலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் காணாமல் போய்விட்டார் அவரது மார்க்கெட்டி சற்று சரிந்தாலும் , 96 என்று சூப்பர் ஹிட் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார் .

இதையடுத்து இவரது நடிப்பில் தற்போது கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, விரைவில் வெளியாக காத்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் கிளாசிக் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடிகை திரிஷா போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒண்று வெளியாகி. ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.