டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு..! இந்தியாவின் முதல் ஆட்டம் யாருடன் தெரியுமா..?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிகள் முழுஇவதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது . இந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
இதில் சுவாரசிய என்னவென்றால் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடு உள்ளது தான் .
இந்தியாவுடன் பாக்கிஸ்தான் மோதும் இந்த போட்டி , அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவுள்ளதாக அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

