சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘2022 கொரோனா தொற்றுடன் தொடங்கி உள்ளது. நண்பர்களே எனக்கு எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 1 வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.