அரசியல்தமிழ்நாடு

ஆரூர் புதியவன் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா..! நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் கனிமொழி எம்பி..!

சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி.காலணியில் உள்ள க.வி.கோ மன்றத்தில் இன்று (02/01/2022) ஆரூர் புதியவன் எழுதிய “சூடு” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, தமிழ்நாடு கொள்கை வளர்ச்சிக் குழு துணைத் தலைவர்ஜெயரஞ்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.