(21-12-2021),இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கொரோனா காலத்திலும் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து 36,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு 160 ரூபாய் விலை சரிந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,554 ரூபாய்க்கும், ஒரு சவரன் 36,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 39,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் விலை குறைந்து ஒரு கிராம் 65.20 காசுகளுக்கும், ஒரு கிலோ 65,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 36,728க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.65.96 விற்பனை ஆனது. பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
